உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விவசாயிகளுக்கு விழிப்புணர்வு சுற்றுலா

விவசாயிகளுக்கு விழிப்புணர்வு சுற்றுலா

மதுரை : சிறுதானிய பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, மதிப்புக்கூட்டுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை விவசாயிகள் ஐதராபாத் எண்ணெய் வித்து, மக்காச்சோள ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.அட்மா திட்டத்தின் கீழ் சேடபட்டி வேளாண் உதவி இயக்குநர் விவசாயிகளை வழியனுப்பினார். சேடபட்டி, அலங்காநல்லுார், கொட்டாம்பட்டி விவசாயிகள் ஐதராபாத் சென்றனர். நிறுவன பேராசிரியை ஹேமாசங்கர் மதிப்பு கூட்டும் தொழில்நுட்பங்களை விளக்கினார். நெல் அறுவடைக்கு பின் சாமை, குதிரைவாலி, தினை, வரகு, மக்காச்சோளம், சோளம், கம்பு பயிரிடுவது, உரம், நீர், பூச்சி, நோய் மேலாண்மை குறித்தும் விளக்கப்பட்டது. தொழில்நுட்ப மேலாளர் கணேசராஜா, உதவி மேலாளர் பிரித்விராஜன் ஏற்பாடுகளை செய்தனர்.

கண்டுணர்வு பயணம்

வாடிப்பட்டி வட்டாரத்தில் 2024----25ம் ஆண்டு இயற்கை வேளாண்மை குறித்த மாநில அளவிலான விவசாயிகள் கண்டுணர்வு பயணம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பாண்டி துவக்கி வைத்தார். இதில் வாடிப்பட்டி, திருமங்கலம், கல்லுப்பட்டி, கள்ளிக்குடி வட்டார 50 விவசாயிகள் பங்கேற்றனர்.குற்றாலம் அரசு தோட்டக்கலை துறை சுற்றுச்சூழல் பூங்காவில் வாசனை திரவிய பயிர்களின் பயன்பாடு குறித்து வைத்தியலிங்கம் விளக்கினார். தென்காசி ஆர்.வி.எஸ்., வேளாண் அறிவியல் நிலையத்தில் மூத்த விஞ்ஞானி சுகுமார் பல்வேறு வகை இயற்கை பூச்சி விரட்டிகள் தயாரித்தல், மண்புழு உரம் உற்பத்தி, பயன்படுத்தல் முறைகள், தொழில்நுட்பம் குறித்து விளக்கினார். விவசாயிகள் பல்வேறு விளக்கங்களை கேட்டறிந்தனர். ஏற்பாடுகளை தொழில்நுட்ப மேலாளர் பிரியா, உதவி மேலாளர்கள் பூமிநாதன், அருணாதேவி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ