விழிப்புணர்வு
சோழவந்தான்: தென்கரை பாலத்தில் வருவாய், தீயணைப்புத்துறையினர் சார்பில் தேசியபேரிடர் மீட்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆர்.டி.ஓ., கருணாகரன் தலைமை வகித்தார். தாசில்தார் சுந்தரவேல், தீயணைப்பு அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், நாகராஜன் முன்னிலை வகித்தனர். பேரிடர் காலங்களில் வீட்டு உபயோகப் பொருட்களைக் கொண்டு மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து செய்து காட்டி,துண்டு பிரசுரங்கள் விநியோகித்து தீயணைப்பு வீரர்கள் விளக்கினர். வருவாய்த்துறை பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.