இறகு பந்து போட்டி
திருமங்கலம்: விருதுநகர் காமராஜர் பொறியியல் தொழில் நுட்பக் கல்லுாரியில் அண்ணா பல்கலை மண்டலத்திற்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான இறகு பந்து போட்டிகள் நடந்தன. இதில் பல்கலையின் 19 மண்டலங்களில் இருந்து வெற்றி பெற்ற அணிகள் கலந்து கொண்டன. மகளிருக்கான போட்டியில் சென்னை புனித ஜோசப் பொறியியல் கல்லுாரி முதலிடத்தை பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு பல்கலையின் விளையாட்டு வாரிய தலைவர் வேலாயுதம், கல்லுாரி முதல்வர் செந்தில் கோப்பையை வழங்கினர்.