உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பாலமேட்டில் தினமும் போக்குவரத்து நெரிசல்

பாலமேட்டில் தினமும் போக்குவரத்து நெரிசல்

பாலமேடு : பாலமேடு பஸ் ஸ்டாண்ட் மெயின் ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். இந்த ரோட்டின் வழியாக மதுரை,வாடிப்பட்டி முடுவார்பட்டி, மாணிக்கம்பட்டி, வலையபட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக கல் குவாரிகளில் இருந்து அதிகளவு எடையுடன் டிப்பர் லாரிகள், மண் லாரிகள் லோடுடன் வருகின்றன. அரசு பஸ்கள் பஸ் ஸ்டாண்டை புறக்கணித்து ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குகின்றனர்.ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்துவதாலும், நடைபாதை கடைகளாலும் இந்த ரோட்டில் நெரிசல் தீர்ந்தபாடில்லை. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆக்கிரமிப்பை அகற்ற பேரூராட்சி நிர்வாகம்,போலீசார், வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை