மேலும் செய்திகள்
இன்று இனிதாக
15-Dec-2024
மதுரை; மதுரை மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் மதுரை அலங்காநல்லுார் கீழக்கரையில் உள்ள கலைஞர் நுாற்றாண்டு ஏழு தழுவுதல் அரங்கில் ஜன. 18, 19ல் பலுான் திருவிழா நடக்கிறது.சுற்றுலா அலுவலர் ஸ்ரீபாலமுருகன் கூறியதாவது: காலை 6:00 முதல் 9:00 மணி வரையும், மாலை 4:00 முதல் 6:00 மணி வரையும் தரையில் இருந்து 100 அடி உயரத்தில் பலுான்கள் பறக்கவிடப்படும். இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ், பெல்ஜியம், தாய்லாந்து உட்பட 15 நாடுகளைச் சேர்ந்த பலுான்கள் காட்சிப்படுத்தப்படும்.பலுான்களில் தமிழக சுற்றுலாத்துறை லோகோ, கார்ட்டூன் உருவங்கள் இடம்பெற்றிருக்கும். குழந்தைகளுக்கு முக்கியத்துவம் தரப்படும். இடைப்பட்ட நேரத்தில் டிஸ்க் ஜாக்கி நிகழ்ச்சி, உணவுத் திருவிழா, கிராமிய கலை நிகழ்ச்சிகள் இரவு 7:00 மணி வரை நடத்தப்படும். அனுமதி இலவசம் என்றார்.
15-Dec-2024