மேலும் செய்திகள்
வேற Level சாதனை Achieve செய்த Rohit
11-Mar-2025
மேலுார் : உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நாவினிபட்டியில் கலெக்டர் சங்கீதா தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது.வலைசேரி பட்டி, அய்வத்தாம் பட்டியில் மேற்பார்வையாளர்கள் திருப்பதி மற்றும் காளை தலைமை வகித்தனர்.வலைச்சேரி பட்டியில் அரசு திட்ட கட்டுமான பணிகள் துவங்கும் முன் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். நீர் நிலைகளில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது மற்றும் சமத்துவ மீன்பிடித் திருவிழாவை அரசு அதிகாரிகள் நடத்த வேண்டுமே தவிர தனி நபர்கள் நடத்தக்கூடாது.அய்வத்தாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் கல் குவாரிகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதால் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
11-Mar-2025