மேலும் செய்திகள்
5 நாள் வேலை நடைமுறை வங்கி ஊழியர் ஆர்ப்பாட்டம்
15-Feb-2025
மதுரை : அனைத்து வங்கிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஊழியர்கள் பற்றாக்குறை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கே.கே.நகர் சென்ட்ரல் வங்கி முன்பாக மாலைநேர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை நகர வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு ஏற்பாடுகளை செய்தது. மாவட்ட வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பு அமைப்பாளர் குமரன், நிர்வாகிகள் பரதன், காளிதாஸ், டேவிட் வினோத்குமார் முன்னிலை வகித்தனர். வங்கிகளில் ஆள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும், தனியார்மயமாவதை தடுக்க வேண்டும், வார வேலை நாட்களை ஐந்தாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
15-Feb-2025