உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வாலாந்துார் கோயிலில் உண்டியலை உடைத்து திருட்டு

வாலாந்துார் கோயிலில் உண்டியலை உடைத்து திருட்டு

உசிலம்பட்டி: வாலாந்துார் அங்காளஈஸ்வரி கோயில் கருவறையின் முன்பகுதியில் இரும்பு, எவர்சில்வர் உண்டியல்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சில்வர் உண்டியல்களை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்றனர். சில மாதங்களுக்கு முன்புதான் உண்டியல் திறக்கப்பட்டது. பின்னர் ஆடி 18ம் பெருக்கு தினத்தில் பக்தர்கள் பலர் காணிக்கை செலுத்தியதை கணக்கிட்டு இச்சம்பவம் நடந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் ரூ. 20 ஆயிரம் வரை திருடு போயிருக்கலாம் எனத் தெரிந்தது. பூஜாரி வினோத் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி