உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அடிப்படை வசதிகள்: உயர்நீதிமன்றத்தில் வழக்கு

அடிப்படை வசதிகள்: உயர்நீதிமன்றத்தில் வழக்கு

மதுரை : மதுரை வெரோணிக்கா மேரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: திருப்பரங்குன்றம் அருகே வடிவேல்கரை, கீழக்குயில்குடி, மொட்டமலையில் குறிப்பிட்ட பிரிவு மக்கள் வசிக்கின்றனர். சாலை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி கலெக்டருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிர மணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு கலெக்டர், திருப்பரங்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்பி தற்போதைய நிலை குறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ