உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தேனீ வளர்ப்பு பயிற்சி

தேனீ வளர்ப்பு பயிற்சி

மதுரை: மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தொழில் முனைவோருக்கான 6 நாட்கள் இலவச தேனீ வளர்ப்பு பயிற்சி நடந்தது. தேனீ வளர்ப்பாளர்கள் சரவணகுமார், தனபதி தேனீ வளர்ப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். தேனில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு பற்றி உதவி பேராசிரியை ஜோதிலட்சுமி விளக்கினார். மதுரையில் உள்ள அரசு அக்மார்க் ஆய்வகத்திற்கு களஆய்வுக்கு பங்கேற்பாளர்கள் அழைத்து செல்லப்பட்டனர். நிலையத்தலைவர் சுரேஷ் சான்றிதழ் வழங்கினார். இணைப் பேராசிரியர் ஆனந்த், உதவி பேராசிரியர் சரவணன் கலந்து கொண்டனர். ஆய்வாளர்கள் விஜயலலிதா, காயத்ரி தேவி ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை