உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கு மதுரை பக்தர்கள் சார்பில் பி க் ஷாவந்தனம்

காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கு மதுரை பக்தர்கள் சார்பில் பி க் ஷாவந்தனம்

மதுரை: திருப்பதியில் மதுரை பக்தர்கள் சார்பில் காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கு பிக்ஷாவந்தனம் நிகழ்ச்சி ஜூலை 29ல் நடக்கிறது.மதுரை பிக்ஷாவந்தன கமிட்டி தெரிவித்துள்ளதாவது: ஹிந்து சமயத்தில் துறவிகள், ஆடி மாத பவுர்ணமி முதல் கார்த்திகை மாத பவுர்ணமி வரை, 'சாதுர்மாஸ்ய விரதம்' கடைபிடிப்பர். இந்நான்கு மாதங்களும் ஒரே இடத்தில் தங்கி, வேத, வேதாந்தங்களை பக்தர்களுக்கு எடுத்துச் சொல்வர். உணவு முறையில் கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்வர்.காஞ்சி சங்கராச்சாரியார் காமகோடி பீடம் ஆச்சாரியார்கள் இருவர், திருப்பதி விநாயக் நகர் காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடத்தில், சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்து வருகின்றனர். இதை முன்னிட்டு மதுரை பக்தர்கள் சார்பில், ஜூலை 29ல் காலை 8:00 மணிக்கு சிறப்பு பிக் ஷாவந்தனம், பாத பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வெங்கடேசன், ஸ்ரீராமன், வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், நெல்லை பாலு, ஆடிட்டர் சுந்தர், தொழிலதிபர் பிரபு, சிவராமன் உட்பட 11 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பங்கேற்று சுவாமிகளின் அருள் பெறலாம். நன்கொடைக்கு வெங்கடேசன் 94420 52198, ஸ்ரீராமன் 90253 02029 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !