மேலும் செய்திகள்
தேசிய கராத்தே போட்டியில் சாதனை
13-Dec-2024
மதுரை : தமிழ்நாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி நடந்தது.பூமிநாதன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். 13 வயது மாணவர்கள் பிரிவில் மகிந்தன் முதலிடம், மோனிஷ் 2ம் இடம், கதிர் 3ம் இடம், மாணவிகள் பிரிவில் வர்தினி முதலிடம், இனியா 2ம் இடம், பிர்நவி 3ம் இடம் பெற்றனர். 15 வயது மாணவர்கள் பிரிவில் ஹரிஷ் அப்ரிடி முதலிடம், மோனிக் 2ம் இடம், முகமது ஷகில் 3ம் இடம், மாணவிகள் பிரிவில் ஜீவிதா ஸ்ரீ முதலிடம், தேவ தர்ஷினி 2ம் இடம், ராதிகா 3ம் இடம் பெற்றனர். 17 வயது மாணவர்கள் பிரிவில் ஜெயபாரதி முதலிடம், ஹரி கிருஷ்ணன் 2ம் இடம், பிரத்யூ 3ம் இடம், மாணவிகள் பிரிவில் பானு ஸ்ரீ முதலிடம், நோசிகா ஸ்ரீ 2ம் இடம், நந்தினி 3ம் இடம் பெற்றனர். முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2ம் பரிசு ரூ.3ஆயிரம், 3ம் பரிசு ரூ.2ஆயிரம், 4 முதல் 10 இடங்களைப் பெற்றவர்களுக்கு தலா ரூ.250 வழங்கப்பட்டது. போக்குவரத்து உதவி கமிஷனர் செல்வின், ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன் சான்றிதழ், காசோலை வழங்கினர். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, விளையாட்டு விடுதி மேலாளர் பிரபு ஏற்பாடுகளை செய்தனர்.
13-Dec-2024