பரிதிமாற் கலைஞர் பிறந்தநாள்
மதுரை : தனித்தமிழ் இயக்கத்திற்கு பாடுபட்ட தமிழறிஞர் சூரியநாராயண சாஸ்திரியார் என்ற பரிதிமாற் கலைஞரின் 155வது பிறந்தநாள் விழா நேற்று நடந்தது.விளாச்சேரி நினைவில்லத்தில் உள்ள அவரது படத்திற்கு அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்தார். கலெக்டர் பிரவீன்குமார், தளபதி எம்.எல்.ஏ., தி.மு.க., தெற்கு மாவட்ட தலைவர் மணிமாறன், மக்கள் தொடர்பு அலுவலர் சாலிதளபதி, உதவி அலுவலர் வினோத் பங்கேற்றனர்.தி.மு.க., தெற்கு மாவட்டம் சார்பில் செயலாளர் மணிமாறன், அ.தி.மு.க., கிழக்கு மாவட்டம் சார்பில் செயலாளர் ராஜன்செல்லப்பா, இளைஞரணி செயலாளர் ரமேஷ், நிர்வாகிகள் செல்வகுமார், பாலமுருகன், நெடுஞ்செழியன் மாலை அணிவித்தனர். தாம்ப்ராஸ் மாநில துணைத்தலைவர் ஜெயஸ்ரீ தலைமையில் ஆலோசகர் கணபதி நரசிம்மன், செயலாளர் ஸ்ரீகுமார், மகளிரணி செயலாளர் உமாகுமார், பொருளாளர் நடராஜன், கிளைத் தலைவர் ரவி, நிர்வாகிகள் நரசிம்மன், நடராஜன், அன்னபூரணி, வசந்த கோகிலம், பவானி, முத்துகிருஷ்ணன் மாலை அணிவித்தனர். பொது அமைப்புகள்
* தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் மாவட்ட பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில், தென்மண்டல தலைவர் அமுதன், நிர்வாகிகள் வெங்கடாசலம், ராமச்சந்திரன், ஜெய்ஹிந்த்புரம் இணைச் செயலளாளர் ரகுராம் மாலை அணிவித்தனர். தமிழ்நாடு பிராமண சமாஜம் சார்பில் மாவட்ட தலைவர் ரவி தலைமையில் நிர்வாகிகள் வெங்கடேசன், ராஜகோபாலன், பிச்சுமணி, விஜயராகவன், புஷ்பா, குழந்தைசாமி, சங்கரநாராயணன், கண்ணன், ஸ்ரீராமன் மாலை அணிவித்தனர். பரிதிமாற் கலைஞர் பேரன்கள் கோவிந்தன், வெங்கடசுந்தரம், வாரிசுகள் அலமேலு, பிரபா, காங்., மாவட்ட செயலர் ஆறுமுகம் பங்கேற்றனர்.* ஹார்விபட்டி எஸ்.ஆர்.வி., மக்கள் நல மன்ற தலைவர் அய்யல்ராஜ் தலைமையில் நிர்வாகிகள் காளிதாசன், அரவிந்தன் உட்பட பலர் மாலை அணிவித்தனர்.