உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பிறந்தநாள் விழா

பிறந்தநாள் விழா

வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் தமிழ்நாடு முக்குலத்தோர் நலச்சங்கம் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வாளுக்கு வேலி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தலைவர் ரங்கசாமி கவுரவ தலைவர்கள் செந்தில்குமார், ஆதி முத்துக்குமார் பங்கேற்றனர். பொதுச்செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் வாளுக்கு வேலி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.துணைத் தலைவர் கார்த்திக், காங்., வட்டார தலைவர் முருகானந்தம், ஜெ., பேரவை இணைச் செயலாளர் ராஜேஷ் கண்ணா, நகர செயலாளர் தனசேகரன், தே.மு.திக., துணைச் செயலாளர் பொன் யாழினி, பேரூர் செயலாளர் பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை