உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பீஹார், டில்லியை பார் எனக்கூறும் முதல்வர் தமிழகத்தை பார்ப்பதில்லை பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வேதனை

பீஹார், டில்லியை பார் எனக்கூறும் முதல்வர் தமிழகத்தை பார்ப்பதில்லை பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வேதனை

அவனியாபுரம்: ''பீஹாரை பார், டில்லியை பார், பெங்களூரைப் பார் என கூறும் முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தை மட்டும் பார்ப்பதே இல்லை,'' என, மதுரை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வேதனை தெரிவித்தார். பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் ஜெயந்திக்காக ராமநாதபுரம் சென்று வந்த துணை ஜனாதி பதி சி.பி.ராதா கிருஷ்ணனை டில்லிக்கு வழி யனுப்ப வந்த நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு தி.மு.க.,- காங்., எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மறைந்த பிரதமர் நேரு காலம் முதல் 10 முறை வாக்காளர் சேர்ப்பு, விடுவிப்பு நடந்து உள்ளது. 2004ல் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் காலத்திலும் வாக்காளர் திருத்தம் நடந்துள்ளது. ஆனால் தற்போது பீஹாரை போல் என கூறுகின்றனர். முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை பீகாரை பார், டில்லியை பார், பெங்களூரைப் பார் என சொல்லிக் கொண்டிருக்கிறார். தமி ழகத்தை யாரும் பார்ப்பதில்லை. பீகாரில் 65 ஆயிரம் போலி வாக்காளர்கள் இருந்தனர். அதில் 35 ஆயிரம் பேர் இறந்தவர்கள். பட்டியலில் இருந்த அவர்கள் பெயர்களை நீக்கியுள்ளனர். முதல்வர் தோல்வி பயத்தில் இருக்கிறார். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டை யனும் பழைய நண்பர்கள் என்ற முறையில் ஒரே காரில் சென்று இருப்பார்கள். பா.ஜ., அரசின் பழிவாங்கும் செயலால் அமலாக்கத்துறை 'ரெய்டு' நடத்துகிறது எனக் கூறுகின்றனர். அமலாக்கத்துறை தனிப்பட்ட அங்கீகாரம் உள்ள அமைப்பு. தேர்தல் ஆணையம் அங்கீகாரம் உள்ள தனி அமைப்பு. இவை இரண்டும் அரசிற்கு தொடர்பு இல்லாதது. இது தி.மு.க.-, காங்கிரசுக்கு தெரியவில்லை. தி.மு.க., பதவியேற்றவுடன் நீட் தேர்வு ரத்து தான் முதல் கையெழுத்து என்று கூறினார்கள். அதை செய்ய முடியாது என்பதும் அவர்களுக்கு தெரியும். காங்., மத்தியில் ஆட்சியில் இருந்த போது தான் நீட் கொண்டு வந்தார்கள். மகளிர் உரிமைத்தொகையை லோக்சபா தேர்தல் வரை கொடுக்கவில்லை. அதன் பிறகு தகுதி வாய்ந்த பெண்களுக்கு என கூறினார்கள். குடும்பப்பெண்களுக்கு என்ன தகுதியை தி.மு.க., வைத்திருக்கிறது என தெரியவில்லை. இரு ஆண்டுகளுக்குப் பின்பு உரிமைத்தொகையை வழங்கினர். துணை முதல்வர் உதயநிதி பேசும் போது விடுபட்டவர்களுக்கு கொடுப்போம் என்று சொல் கிறார். தமிழகத்தில் உள்ள ஆட்சிதான் விடுபடப்போகிறதே தவிர வேறு ஏதும் விடுபட போவதில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ