பா.ஜ.,வினர் ஆலோசனை
மதுரை: மதுரை தெற்கு தொகுதி பா.ஜ., சார்பில் 2026 தேர்தல் பணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சட்டசபை பொறுப்பாளர் ராம சீனிவாசன் தலைமையில் நடந்தது. அமைப்பாளர் ஏ.ஆர்.மகாலட்சுமி, இணை பொறுப்பாளர் துரை பாலமுருகன் ஆகியோர் பங்கேற்று பேசினர். சட்டசபை தொகுதியின் பூத்கமிட்டி மாநாட்டை சிறப்பாக நடத்துவது, மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை விரைவாக மக்களிடம் சேர்ப்பது, மோசமான சாலைகளை சரிசெய்ய மாநகராட்சியை வலியுறுத்த வேண்டும், இதற்காக மக்களை திரட்டி போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர் பொதுச் செயலாளர் கண்ணன், மாவட்ட செயலாளர் ஆஷாராணி, மண்டல தலைவர்கள் திருமுருகன், மணிமாறன், குமரன், பாலமுருகன், பாண்டியராஜா கலந்து கொண்டனர்.