உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பாலுாட்டும் அறை கேட்டு கலெக்டரிடம் பா.ஜ., மனு

பாலுாட்டும் அறை கேட்டு கலெக்டரிடம் பா.ஜ., மனு

மதுரை; மதுரை கலெக்டர் அலுவலகத்தில் குழந்தகைளுக்கு பாலுாட்டும் அறையை உடனே பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பா.ஜ.,வினர் கலெக்டர் சங்கீதாவிடம் மனு கொடுத்தனர்.மாவட்ட செயலாளர் இசக்கிமீனா, மகளிர் அணித்தலைவி தனலட்சுமி, துணைத்தலைவி செல்வி, வழக்கறிஞர்கள் முத்துக்குமார், ராஜேஸ்வரி, கவிதா உள்ளிட்ட நிர்வாகிகள் கூறியதாவது: கலெக்டர் அலுவலகத்தில் எங்கள் கோரிக்கை ஏற்று பாலுாட்டும் அறை ஏற்படுத்தப்பட்டது. பின்னர் அதனை நிலஅளவைத் துறையினர் ஆக்கிரமித்ததால் பயன்பாட்டில் இல்லாமல் போனது. அதனை திறந்துவிட கலெக்டரிடம் மனு கொடுத்தோம். உடனே திறக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ