மேலும் செய்திகள்
மாணிக்கவாசகர் சிலையை விற்க முயன்ற 2 பேர் கைது
13-Oct-2025
உசிலம்பட்டி: மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டக்கோரி பாரதிய பா.பி., தலைவர் முருகன்ஜி சாகும்வரை உசிலம்பட்டியில் உண்ணா விரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். நேற்று ஆதர வாளர்களுடன் வந்தார். அவருக்கு அ.தி.மு.க., பா.பி., மூ.மு.க., உள்ளிட்ட கட்சி யினர் ஆதரவு தெரிவித்தனர். தேவர் சிலை வளாகத்தில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர். இதைதொடர்ந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லுாரி விளையாட்டு மைதானத்தில் 4 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டார். தாசில்தார் சந்திர சேகர், டி.எஸ்.பி., சந்திரசேகரன் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு காணப்படாத நிலையில் கைது செய்யப்பட்டார்.
13-Oct-2025