உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பா.ஜ.,வினர் சிறப்பு யாகம்

பா.ஜ.,வினர் சிறப்பு யாகம்

மதுரை; அரசியல் மேற்படிப்புக்காக லண்டன் சென்றுள்ள பா.ஜ., தலைவர் அண்ணாமலை டிச.1 ல் சென்னை திரும்புகிறார். அதன்பின் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளார்.இந்நிலையில் அவரது தமிழகம் வருகை, 2026 ல் முதல்வராக வேண்டும் உள்பட பல்வேறு காரணங்களுக்காக மதுரையில் நகர் பா.ஜ.,வினர் சிறப்பு யாகம் நடத்தினர்.கோச்சடை முத்தையா கோயிலில் நகர் தலைவர் மகாசுசீந்திரன் தலைமையில், மாவட்ட பொதுச் செயலாளர் டி.எம்.பாலகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணைத் தலைவர் விஷ்ணுபிரசாத், காளவாசல் மண்டல் தலைவர் ரங்கராஜன், நிர்வாகிகள் ஜெயகுமார், மாதேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ