மேலும் செய்திகள்
துாய அடைக்கல மாதா கற்கோயில் ஆண்டு விழா
30-Aug-2024
மேலுார் : திருவாதவூரில் மழை வேண்டி சோழப்பேரேறி கண்மாயில் உள்ள புருஷா மிருகத்திற்கு கருப்பு சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. இந் நிகழ்ச்சிக்காக கிராமத்து சார்பில் வாங்கப்பட்ட தேங்காய்களை மந்தையிலிருந்து மக்கள் ஊர்வலமாக கொண்டு சென்று தீயில் சுட்டு அரைத்து புருஷா மிருகத்திற்கு கருப்பு சாற்றினர். அதனைத் தொடர்ந்து இன்று கிராமம் சார்பில் வாங்கிய கிடாயினை பலி கொடுத்து கறியை ஹிந்துக்கள் மந்தையிலும், முஸ்லிம்கள் பள்ளிவாசலிலும் கந்திரி கொடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து மக்கள் பொங்கல் வைப்பர். மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி ஜாதி, மத பேதமின்றி ஒற்றுமையாக வாழ இவ்விழா நடத்துவதாக கிராமத்தினர் தெரிவித்தனர்.
30-Aug-2024