பி.என்.ஐ., அமைப்பின் ஆண்டு விழா
புதுார் : புதுார் சூர்யா நகரில் பி.என்.ஐ., மதுரை அமைப்பு சார்பில் 'மெகா மெம்பர்ஸ் டே' எனும் ஆண்டு விழா நடந்தது. செயல் இயக்குநர்கள் ராஜரத்தினம் இளங்கோவன், சிந்து ராகவி வரவேற்றனர். கிரெடாய் அமைப்பின் தலைவர் இளங்கோவன், தமிழகம் முழுவதுமுள்ளபி.என்.ஐ., செயல் இயக்குநர்கள் பங்கேற்றனர். உறுப்பினர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் பரிசு வழங்கப்பட்டது.வணிக எழுத்தாளர்ராதாகிருஷ்ணன் பேசுகையில், ''கூட்டுத் தலைமையால்வணிகத்தைவளர்க்க முடியும்.விவசாயிகள் எப்போதும் கூட்டாகவே விவசாயம் செய்வர். அதை வணிகர்களாகிய நாமும் பின்பற்ற வேண்டும். நமக்கு தெரிந்த விஷயங்களை போட்டி, பொறாமையின்றி பிறருடன் பகிர வேண்டும். அதுவே கூட்டுத் தலைமையின் அடையாளம்.சாணக்யர் 2 ஆயிரத்து 400 ஆண்டுகளுக்கு முன் வணிக முறை குறித்து விளக்கியுள்ளார். நம்மை விட அதிக லாபம் ஈட்டும் தொழில் தலைவர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். நமக்கு சமமாக லாபம் ஈட்டுவோரிடம் எப்போதும் கலந்தாலோசிக்க வேண்டும். நம்மை விட குறைந்த லாபம் ஈட்டுவோரிடம் புதிய விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்'' என்றார்.நிர்வாகிகள் சந்தோஷ் ராதாகிருஷ்ணன், பகத்சிங் ஜேம்ஸ், சாரா, சபரிபாபு, மருதுபாண்டி, ஜஹாங்கிர் அகமத் உட்பட பலர் பங்கேற்றனர். நிர்வாக இயக்குநர் ஹரிபிரசாத் ஏற்பாடுகளை செய்தார்.