மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
அவனியாபுரம்:மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமாருக்கு வந்த மின்னஞ்சலில் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் இருந்தது. அதைத் தொடர்ந்து விமான நிலைய உள்வளாகம், வெளிவளாக பகுதிகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், தமிழக போலீசார், வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர். விமான நிலையத்திற்கு வரும் அனைத்து வாகனங்களையும், பயணிகளின் உடைமைகளையும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனையிட்டனர். பாதுகாப்பு காரணமாக பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.