மேலும் செய்திகள்
திண்டுக்கல்லில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
06-Dec-2024
திருநகர்: திருநகர் சவிதாபாய் மேல்நிலைப் பள்ளியில் திருநகர் மக்கள் மன்றம், திருநகர் அனைத்து வியாபாரிகள் சங்கம், நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில் புத்தகக் கண்காட்சி துவங்கியது. திருநகர் மக்கள் மன்ற தலைவர் செல்லம் தலைமை வகித்தார். செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.மாநகராட்சி மண்டல தலைவர் சுவிதா முன்னிலை வகித்தார். மேயர் இந்திராணி பொன்வசந்த் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். முதல் விற்பனையை மாணிக்கம் தாகூர் எம்.பி., துவக்கி வைக்க, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம் பெற்றார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில பொதுச்செயலாளர் அறம், கவுன்சிலர்கள் சுவேதா, இந்திரா காந்தி, திருநகர் கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் செயலாளர் ஆர்த்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டியன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீனா, சாந்தி பங்கேற்றனர்.பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா பேசினார். திருநகர் மக்கள் மன்ற துணைத் தலைவர் பொன் மனோகரன் தொகுத்து வழங்கினார். திருநகர் ஜெயின்ஸ் குரூப் ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் நன்றி கூறினர். டிச. 30வரை தினமும் காலை 9:30முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம்.
06-Dec-2024