| ADDED : நவ 27, 2025 05:37 AM
திருநகர்: திருநகர் மக்கள் மன்றம், திருநகர் அனைத்து வியாபாரிகள் நல சங்கம், நேஷனல் புக் டெஸ்ட் ஆப் இந்தியா, மதுரை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், நடைப்பயிற்சி நண்பர்கள், ஜெயன்ட்ஸ் குரூப் சார்பில் திருநகர் சவிதாபாய் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புத்தகக் கண்காட்சி, விற்பனை துவங்கியது. மக்கள் மன்ற தலைவர் செல்லா தலைமை வகித்தார். செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். தஞ்சை தமிழ்ப் பல்கலை முன்னாள் துணைவேந்தர் திருமலை திறந்து வைத்து பேசினார். கவுன்சிலர்கள் இந்திராகாந்தி, சுவேதா, சவிதாபாய் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மீனா, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, மக்கள் மன்ற இணை செயலாளர் கிருஷ்ணசாமி, துணைத் தலைவர் பொன் மனோகரன், ஜெயன்ட்ஸ் குரூப் தலைவர் மரகதசுந்தரம், சரஸ்வதி நாராயணன் கல்லுாரி தமிழ்த் துறைத் தலைவர் கார்த்திகா தேவி, நியூ செஞ்சுரி புத்தக நிறுவன முதுநிலை விற்பனை சீரமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி பேசினர். இன்றும் கண்காட்சி, விற்பனை நடக்கிறது. அனுமதி இலவசம். சிறப்பு தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது என நிர்வாகிகள் தெரிவித்தனர்.