உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நுால் வெளியீட்டு விழா

நுால் வெளியீட்டு விழா

மதுரை: மதுரையில் சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு நுால் வெளியீட்டு விழா, மகாத்மா பள்ளி குழும தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது. சென்னை சென்டிபிக் முதுநிலை திட்ட மேலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை முன்னாள் பதிவாளர் சண்முகையா, 'சாய் பஜன் பாடல்களால் அடைந்த பலன்களும் செய்வினையை ஜெயித்ததும்' எனும் ஆங்கில நுாலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மதுரை காமராஜ் பல்கலை முன்னாள் முதுநிலை கண்காணிப்பாளர் சுந்தரமகாலிங்கம் நுாலை வெளியிட, முதல் பிரதியை மாவட்ட நீதிபதி ரோகிணி பெற்றுக்கொண்டார். பல்கலை பேராசிரியை சுகாஸ்ரீ நன்றி கூறினார். பள்ளி குழும நிர்வாகிகள் பிரேமலதா, கார்த்தி, சுந்தரம் இன்டஸ்ட்ரீஸ் முன்னாள் தலைவர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி