நுால் மதிப்புரை
மதுரை: மதுரை காந்தி மியூசிய ஆராய்ச்சி பிரிவு சார்பில் 208 வது நுால் மதிப்பாய்வு கூட்டம் நடந்தது. உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லுாரி அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் சதீஷ் வரவேற்றார். மதுரை வக்போர்டு கல்லுாரி முன்னாள் முதல்வர் அப்துல் காதிர் தலைமை வகித்தார். வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா எழுதிய 'மேக்கர்ஸ் ஆப் மாடர்ன் இந்தியா' ஆங்கில நுாலை ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் மதிப்புரை செய்தார். ப்ரீத்தி கல்வியியல் கல்லுாரி உதவி பேராசிரியர் பாக்கியராஜ் நன்றி கூறினார். செயலாளர் நந்தாராவ் ஏற்பாடுகளை செய்திருந்தார்.