ஏட்டு ‘சஸ்பெண்ட்’
மதுரை: மதுரை ஓபுளா படித்துறை சந்திப்பில் நேற்று (அக்.,21) மதிச்சியம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சர்மிளா தலைமையில் வாகன சோதனை நடந்தபோது ஏட்டு ரவிக்குமா ர் போதையில் இருப்பதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தனர். அவரை மருத்துவ பரிசோதனைக்கு இன்ஸ்பெக்டர் அனுப்பி வைத்தார். இவர் சில நாட்களுக்கு முன் இதே பெண் இன்ஸ்பெக்டரிடம் ரவிக்குமார் தகாத வார்த்தைகளால் பேசிய ஆடியோ வைரலானது. துறை ரீதியான விசாரணைக்கு பின் இன்று (அக்.,22) ஏட்டு ரவிக்குமாரை ‘சஸ்பெண்ட்’ செய்து கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.