மேலும் செய்திகள்
மாநில டேக்வாண்டோ போட்டி
20-Sep-2025
திருப்பரங்குன்றம்: மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டிகள் சிவகாசியில் நடந்தது. 70க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி மாணவர்கள் பதக்கங்கள் வென்றனர். 80--85 கிலோ எடை பிரிவில் கோகுல் குமார் தங்கப்பதக்கம், 85--90 கிலோ எடை பிரிவில் கோபாலகிருஷ்ணன் வெள்ளி பதக்கம் வென்றனர். 75--80 கிலோ எடை பிரிவில் கிஷோர் குமார், 60--65 கிலோ எடை பிரிவில் ராமர், 90 கிலோவிற்கு மேற்பட்ட எடை பிரிவில் பிரகாஷ் பெண்கல பதக்கங்கள் வென்றனர். கல்லுாரி தலைவர் விஜயராகவன், கவுரவ தலைவர் ராஜகோபால், செயலாளர் ஸ்ரீதர், முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு, உடற்கல்வி இயக்குனர் ராகவன், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர்.
20-Sep-2025