மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி தேனி
28-Aug-2025
மதுரை : அழகர்கோவில் கள்ளழகர் கோயிலின் உப கோயிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில், செப். 23 முதல் அக். 5 வரை புரட்டாசி மாத பிரம்மோற்ஸவ விழா நடக்கிறது. செப். 23 மாலை 5:30 மணிக்கு அங்குரார்ப்பணம் நடக்கிறது. செப். 24 காலை 9:30 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் கொடியேற்றப்பட்டு, காலை 10:15 மணிக்கு மேல் 11:00 மணிக்குள் ரதத்திற்கு முகூர்த்தக்கால் நாட்டப்படுகிறது. செப். 25 முதல் அக். 1 வரை தினமும் காலை, மாலையில் சுவாமிக்கு அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டு, அனுமார், கருடன், சேஷன் உள்ளிட்ட அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடக்கின்றன. தேரோட்டம் விழாவின் முக்கிய நிகழ்வாக, அக். 2 காலை 7:45 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் தேரில் பெருமாள் எழுந்தருள்கிறார். காலை 9:15 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது. அக். 3ல் பூச்சப்பரம்,அக். 4 காலை 6:50 மணிக்கு மேல் 7:10 மணிக்குள் பெருமாள் தெப்பத்தில் எழுந்தருள்கிறார். அன்று காலை 10:30 மணிக்கு மேல் 11:30 மணிக்குள்ளும், மாலை 6:00 மணிக்கு மேலும்தெப்ப உற்ஸவம் நடக்கிறது. அக். 5ல் உற்ஸவ சாந்தியுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கோயில் துணை கமிஷனர் யக்ஞநாராயணன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
28-Aug-2025