வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இதுபோன்ற செய்திகளை முன் பக்கத்தில் வெளியிடுங்கள் வருட முடிவில் இவர்களை நினைவு கூறுவோம்
ஆத்மா சாந்தி அடைய வேண்டும் பிராத்தனை செய்கிறேன்
மேலும் செய்திகள்
13வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்
12-Sep-2024
மதுரை : விபத்தில் தலைக்காயம் ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து மூளைச்சாவு அடைந்த பெண் சமையல் மாஸ்டர் சாந்தியின் 49, உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானமாக வழங்கப்பட்டன.கோவை மாவட்டம் ரத்தினபுரியைச் சேர்ந்தவர் சாந்தி. சமையல் மாஸ்டரான இவர், கடந்த செப்.16 இரவு திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பகுதியில் டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றபோது வேகத்தடையால் தவறி விழுந்தார். தலைக்காயம் ஏற்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். செப்.,19 அதிகாலை 3:30 மணிக்கு மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய கணவர் பாஸ்கரன் முன்வந்தார்.அவரது இதயம் சென்னை எம்.ஜி.எம்., மருத்துவமனை, சிறுநீரகத்தில் ஒன்று திருச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, மற்றொரு சிறுநீரகம் மற்றும் கருவிழிகள், எலும்பு மதுரை அரசு மருத்துவமனை, கல்லீரல் மதுரை வேலம்மாள் மருத்துவமனை, தோல் மதுரை கென்னட் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன. இதன் மூலம் 7 பேர் மறுவாழ்வு பெற்றனர். சாந்தி உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.முன்னதாக சாந்தி இதயத்தை சென்னை கொண்டு செல்ல மதுரை நகர் போக்குவரத்து போலீசார் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்தை நிறுத்தி ஆம்புலன்ஸ் தடையின்றி விமான நிலையத்திற்கு குறித்த நேரத்திற்குள் சென்றடைய ஏற்பாடு செய்திருந்தனர்.
இதுபோன்ற செய்திகளை முன் பக்கத்தில் வெளியிடுங்கள் வருட முடிவில் இவர்களை நினைவு கூறுவோம்
ஆத்மா சாந்தி அடைய வேண்டும் பிராத்தனை செய்கிறேன்
12-Sep-2024