உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குழாய்கள் உடைந்து குடிநீர் வீண்

குழாய்கள் உடைந்து குடிநீர் வீண்

பேரையூர்: பேரையூர்- - டி.கல்லுப்பட்டி ரோடு கொண்டுரெட்டிபட்டி பஸ் ஸ்டாப் அருகே பல மாதங்களாக குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது.இப்பகுதி மக்கள் பலமுறை புகார் கொடுத்தும் சரி செய்யவில்லை. அதேபோல் குருவப்பநாயக்கன்பட்டி விலக்கு அருகே குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. பேரையூர்- - உசிலம்பட்டி ரோடு பி. தொட்டியபட்டி அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. மங்கல்ரேவு தெற்கு தெரு பஸ் ஸ்டாப் அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. இவ்வாறு பல இடங்களில் வைகை கூட்டு குடிநீர் திட்டக் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகின்றன. பள்ளங்களில் தண்ணீர் தேங்குவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.சில இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து அருகில் உள்ள சாக்கடை குடிநீரில் கலந்து வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் உடைப்புகளை சரி செய்து சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை