உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாட்டுவண்டி பந்தயம்

மாட்டுவண்டி பந்தயம்

மேலுார் : வெள்ளநாயகம்பட்டி மந்தை கருப்பண சுவாமி கோயில் கார்த்திகை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாடு பந்தயத்தில் 9 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் அக்னி முருகன், வெள்ளநாயகம்பட்டி ராமையா, பரவை சோனைமுத்து, புலிமலைபட்டி பிரபு ஆகியோரது மாடுகள் முதல் நான்கு பரிசுகளை வென்றன.சிறிய மாடு பந்தயத்தில் 21 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதால் போட்டி இரண்டு பிரிவுகளாக நடந்தது. இதில் ஒத்தப்பட்டி ஜெகநாதன், நல்லாங்குடி முத்தையா முதல் பரிசு, பல்லவராயன்பட்டி வர்ஷா இளமாறன், தனியாமங்கலம் போஸ் 2ம் பரிசு, கிடாரிப்பட்டி முருகேசன், சுண்ணாம்பூர் செல்வம் 3ம் பரிசு, பொய்யாத நல்லுார் கபீப் முகமது, தனியாமங்கலம் சுந்தர்ராஜ் ஆகியோரது மாடுகள் 4ம் பரிசை வென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை