மாட்டு வண்டி பந்தயம்
மேலுார் : புலிமலைபட்டியில் முனிசாமி, பாலமுருகன் கோயில் திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.பெரியமாட்டில் 13 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதில் புலி மலைபட்டி முனிசாமி, அரிமளம் அய்யனார், மட்டங்கிபட்டி காவியா, ஏனாதி ஏ.டி.என். ஆகியோருடைய மாடுகள் முதல் நான்கு பரிசைகளை வென்றது.நடுமாட்டில் 16 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதில் மேல செம்பன் மாரிலிங்கேஸ், மஞ்ச நாயக்கம்பட்டி வீர ஜோதி, புலி மலைப்பட்டி முனுசாமி, நாட்டரசன் கோட்டை பழனி மாடுகள் முதல் நான்கு பரிசைகளை வென்றது. சிறிய மாட்டில் 33 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதால் போட்டி இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் புலி மலைப்பட்டி இளவரசு, எட்டியத்தளி முத்தையா முதல் பரிசு, சின்ன மாங்குளம் அழகு, பொட்டிபுரம் புதுார் அபிநாயகி 2ம் பரிசு, புலி மலைப்பட்டி முத்து மீனாட்சி, கோட்டையூர் சிதம்பரம் 3ம் பரிசு, காராம்பேட்டை சஞ்சய் காந்தி, புலி மலைப்பட்டி முனிசாமி 4ம் பரிசுகளை வென்றனர்.