உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பஸ் -- கார் மோதி விபத்து; மதுரை பேராசிரியர் பலி

பஸ் -- கார் மோதி விபத்து; மதுரை பேராசிரியர் பலி

பாலக்காடு: பாலக்காடு அருகே பஸ் - கார் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மதுரை, ஆண்டாள்புரம் அக்ரினி நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார், 41; மதுரை காமராஜ் பல்கலை சுற்றுலா மற்றும் ஹோட்டல் மேலாண்மை துறை தலைவர். இவருக்கு மனைவி, மகள் உள்ளனர். நேற்று முன்தினம் பிரவீன்குமார், மதுரையை சேர்ந்த செல்லவேல், 33, குருவாயூர் கோவிலுக்கு சென்று, காரில் மதுரை வந்து கொண்டிருந்தனர். பாலக்காடு மாவட்டம், கொழிஞ்சாம்பாறை அரசு மருத்துவமனை அருகே வந்த போது, கோவையை நோக்கி சென்ற கேரள அரசு பஸ், கார் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த பிரவீன்குமார் உயிரிழந்தார். செல்லவேல் தப்பினார். கொழிஞ்சாம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ