உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / செப்.30 வரை பஸ் பாஸ்

செப்.30 வரை பஸ் பாஸ்

மதுரை: அரசு போக்குவரத்து கழக பஸ்களில் 2025 மார்ச் 31 வரை வழங்கப்பட்ட இலவச பஸ், சலுகை பாஸ் அட்டையை செப். 30 வரை பயன்படுத்தலாம் என கோட்ட மேலாண் இயக்குநர் இளங்கோவன் தெரிவித்தார். அவர் கூறுகையில் ''மாற்றுத்திறனாளிகள், சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள், வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு 2025 மார்ச் 31 வரை இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனை செப். 30 வரை நீட்டித்துள்ளதால் அனைத்து டிரைவர், கண்டக்டர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. எனவே இலவச மற்றும் சலுகை கட்டண பாஸ் அட்டையை செப். 30 வரை பயன்படுத்தலாம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை