மண்டலம் 1ல் புதிய பாதாளச் சாக்கடை இணைப்பு பெற முகாம்
மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் 1 (கிழக்குக்கு உட்பட்ட வார்டுகளில் பாதாளச் சாக்கடை இணைப்பு வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் வாரந்தோறும் மூன்று நாட்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மண்டலத்திற்கு உட்பட்ட 16 வார்டுகளில் வார்டுகளில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் புதிய பாதாள சாக்கடை இணைப்பு வழங்கும் பணி நடக்கின்றன. 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு இணைப்பு வழங்க வேண்டியுள்ளது. இணைப்புக்கான மனுக்களை மக்கள் அளித்து வருகின் றனர். இந்நிலையில் மனு அளித்து ஒரே நாளில் இணைப்பு உத்தரவு வழங்கும் வகையில் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்த கமிஷனர் சித்ரா உத்தரவிட்டுள்ளார்.
முகாம்கள் நடக்கும் விவரம்
காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மனு அளிக்கலாம். அனுமதியின்றி பாதாள சாக்கடை இணைப்பு இருப்பது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.