உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோயில்களில் பிரேக் தரிசனத்திற்கு எதிராக வழக்கு: கோர்ட் தள்ளுபடி

கோயில்களில் பிரேக் தரிசனத்திற்கு எதிராக வழக்கு: கோர்ட் தள்ளுபடி

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட 6 கோயில்களில் பிரேக் தரிசனத்திற்கு எதிராக தாக்கலான வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. திருச்செந்துார் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் தினமும் ஒரு மணிநேரம் பிரேக் தரிசன முறை அறிமுகப்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. முதற்கட்டமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர்கோவில் கள்ளழகர் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரேக் தரிசன முறை அறிமுகப்படுத்த அரசு அறிவிப்பு வெளியானது. இதனடிப்படையில் திருசெந்துார் கோயிலில் குறிப்பிட்ட விழா நாட்கள் தவிர, பிற நாட்களில் தினமும் மதியம் 3:00 முதல் மாலை 4:00 மணி வரை இடைநிறுத்தம் தரிசனம் அறிமுகப்படுத்தப்படும். பக்தர் ஒருவருக்கு கட்டணம் ரூ.500. ஆட்சேபனை இருந்தால் செப்.11 க்குள் தெரிவிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியானது.இது பக்தர்களை பாகுபடுத்தும் வகையில் உள்ளது. சட்டம், விதிகளுக்கு முரணானது. பிரேக் தரிசனத்திற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு பிறப்பித்த உத்தரவு: ஆட்சேபனை தெரிவிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதை பரிசீலித்து அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மனுதாரர் முன்கூட்டியே நீதிமன்றத்தை நாடியுள்ளார். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !