உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை ஆதினம் மீது 4 பிரிவுகளில் வழக்கு

மதுரை ஆதினம் மீது 4 பிரிவுகளில் வழக்கு

சென்னை:மதுரை ஆதினத்தின் மீது சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.மதுரை ஆதினம் மே 2ம் தேதி, மதுரையிலிருந்து சென்னை நோக்கி தன் காரில் சென்றார். உளுந்துார்பேட்டை அருகே அவரது கார் மீது மற்றொரு கார் மோதியது. இது குறித்து பேட்டியளித்த மதுரை ஆதினம் 'தன்னை கொல்ல சதி நடந்தது' என்றார். ஆனால் அவர் தரப்பில் போலீசில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை.சென்னை, அயனாவரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசில் மதுரை ஆதினம் மீது புகார் அளித்தார். இதனடிப்படையில், கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், சமூகத்திற்கிடையே பகைமையை ஏற்படுத்துதல், தவறான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ