உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதிப்பெண் விபரம் வழங்க வழக்கு

மதிப்பெண் விபரம் வழங்க வழக்கு

மதுரை : திருநெல்வேலி வழக்கறிஞர் பட்டுராஜ், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:மருத்துவக் கல்லுாரி தேர்வுகளில், ஒவ்வொரு வினாவிற்கும் அளித்த பதில்களுக்கு சரியான முறையில் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, மாணவர்களுக்கு உரிமை உண்டு.இவ்விபரங்களை தமிழ்நாடு எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலையிடம் மாணவர்கள் கோரினால் வழங்குவதில்லை. வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு, எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலை துணைவேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு ஜன.8 க்கு ஒத்திவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ