உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தெரு நாய்களை கட்டுப்படுத்த வழக்கு: உச்சநீதிமன்றத்திற்கு மாற்றம்

தெரு நாய்களை கட்டுப்படுத்த வழக்கு: உச்சநீதிமன்றத்திற்கு மாற்றம்

மதுரை:மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. தெருநாய்க்கடிக்கு ஆளாவோர் 'ரேபிஸ்' நோயால் பாதிக்கப்படுகின்றனர். தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பல்வேறு மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கலாகின. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி. அருள்முருகன் அமர்வு பிறப்பித்த உத்தரவு: இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்கிறது. உயர்நீதிமன்றங்களில் இதுபோல் நிலுவையிலுள்ள வழக்குகளை அங்கு மாற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்குகள் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்படுகின்றன, என உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை