மேலும் செய்திகள்
திருப்பரங்குன்றம் பகுதியில் நெல் அறுவடை துவக்கம்
19-Jan-2025
திருப்பரங்குன்றம் : நெல் அறுவடை நேரத்தில் வைக்கோல் அதிக அளவில் கிடைப்பதால் மாடு வளர்ப்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருப்பரங்குன்றத்தை சுற்றி வைகை அணை தண்ணீரால் நிரம்பும் கண்மாய்கள், மானாவாரி கண்மாய்கள் உள்ளன. இக்கண்மாய் தண்ணீர் மூலம் 15 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.கடந்தாண்டு தாமதமாக பெய்த மழையால் கண்மாய்களும் தாமதமாக நிரம்பின. அதனால் கண்மாய் தண்ணீரை நம்பி விவசாயிகளில் பெரும்பாலானோர் நெல் நடவு செய்யவில்லை. மானாவாரி பகுதி நிலங்கள் ஆழ்குழாய், கிணறுகளில் தண்ணீர் இருந்த விவசாயிகள் நெல் நடவு செய்தனர்.இந்தாண்டு பலரும் நெல் நடவு செய்துள்ள நிலையில் அறுவடை துவங்கியுள்ளது. வைக்கோலும் அதிக அளவில் கிடைக்கிறது. வெளி மாவட்டங்களில் வைக்கோல் வாங்கும் நிலை இல்லை என மாடு வளர்ப்போர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
19-Jan-2025