நுாற்றாண்டு விழா
திருமங்கலம்: திருமங்கலம் தாலுகா கிழவனேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 92 மாணவர்களும் 7 ஆசிரியர்களும் உள்ளனர். இந்த பள்ளி தொடங்கி 100 ஆண்டுகளானதையடுத்து, நுாற்றாண்டு விழா நடந்தது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ரகுபதி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் செல்வி, சுப்பிரமணியன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் சரவணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் வீரஅழகு முன்னிலை வகித்தனர். நுாற்றாண்டு விழா கண்ட பள்ளிக்கு பொருள்கள், நிதி உதவியை கிராம மக்கள் செய்தனர். தலைமையாசிரியை சியாமளாதேவி ஆண்டறிக்கை வாசித்தார். கலை நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர்கள் மீனா, பிரபா, சிவலட்சுமி, சிந்து தொகுத்து வழங்கினர். ஆசிரியர் மணிவண்ணன் நன்றி கூறினார்.