உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / படேல் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு அக்.,31 முதல் நவ., 25 வரை பாதயாத்திரை

படேல் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு அக்.,31 முதல் நவ., 25 வரை பாதயாத்திரை

மதுரை: இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அக்., 31 முதல் நவ., 25 வரை பாதயாத்திரை நடக்க உள்ளதாக மத்திய அரசு இளைஞர் நலத்துறையின் 'மை பாரத்' மாநில இயக்குநர் செந்தில் குமார் தெரிவித்தார். மதுரையில் அவர் கூறியதாவது: சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு அக்., 27 முதல் கல்லுாரிகளில் பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடந்து வருகின்றன. இளைஞர்களை நல்ல எண்ணங்கள் உடையவர்களாகவும், தேசபக்தி மிக்கவர்களாகவும் உருவாக்கும் வகையில் தமிழகத்தில் அக்., 31 முதல் நவ., 25 வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் 8 கி.மீ., துாரத்திற்கு பாதயாத்திரை நடக்க உள்ளது. இதற்காக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் தமிழக பிரநிதிகளாக பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் நவ., 8 ல் ரேஸ்கோர்ஸ் மைதானம் முதல் காந்தி மியூசியம் வரை காலை 8:00 மணிக்கு பாதயாத்திரை நடக்கிறது. மாவட்ட அளவில் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் 300 பேருக்கு தேசிய இளைஞர் தினமான ஜன., 12 ல் புதுடில்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடியுடன் உரையாடும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. 500 க்கும் மேற்பட்ட இளைஞர்களைக் கொண்டு, 'மை பாரத்' லோகோவுடன் டீ சர்ட் வழங்கி தேசியக்கொடியுடன் பாத யாத்திரை நடத்த உள்ளோம். இறுதிக்கட்டமாக குஜராத்தில் நவ., 26 முதல் டிச., 6 வரை 150 கி.மீ., நடைபயணத்துடன் பாதயாத்திரை நிறைவு பெறுகிறது. பாதயாத்திரையில் பங்கேற்க mybharat.gov.in/pages/unity_march என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை