உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரயில் சேவையில் மாற்றம்

ரயில் சேவையில் மாற்றம்

மதுரை : மதுரை, திருவனந்தபுரம் கோட்டங்களில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.ஜூலை 20ல் நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.டி., ரயில் (16352) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது.ஜூலை 26ல் மதுரை - குருவாயூர் ரயில் (16327) கொல்லம் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கம் ஜூலை 27ல் ரயில் (16328), கொல்லத்தில் இருந்து மதியம் 12:00 மணிக்கு புறப்பட்டு மதுரை வரும். இவ்விரு ரயில்களும் கொல்லம் - குருவாயூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை