மின் இணைப்பு எண் மாற்றம்
மதுரை: மதுரை மின்வாரியம் வில்லாபுரம் உபகோட்டம் டி.வி.எஸ்., நகர் பிரிவில் பின்வரும் மின்இணைப்பு எண்கள் நிர்வாக காரணங்களுக்காக இன்று (ஜூன் 6) முதல் மாற்றம் செய்யப்பட உள்ளன.009 ரெசிடென்சி ஜோன் பகுதியில் 2428 இணைப்புகள், 010 மெயின் ரோடு பகுதியில் 295 இணைப்புகள், 011 முத்துராமலிங்கபுரம் பகுதியில் 763 இணைப்புகள், 012 ஹவுசிங் யூனிட் ஜோன் பகுதியில் 467 இணைப்புகள், 013 எஸ்.எஸ்.குடியிருப்பு ஜோன் பகுதியில் 83 இணைப்புகள், போன்றவை பழங்காநத்தம் பிரிவுக்கு முறையே, 015 - ரெசிடென்சி ஜோன், 016 - மெயின் ரோடு, 017- முத்துராமலிங்கபுரம், 018 - ஹவுசிங் யூனிட் ஜோன், 019 எஸ்.எஸ்.குடியிருப்பு ஜோன் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது என, செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.