உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சவுக்கு சங்கர் கைது

சவுக்கு சங்கர் கைது

மதுரை : சென்னையைச் சேர்ந்தவர் யூடியுபர் சவுக்கு சங்கர். தேனி பூதிப்புரத்தில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தபோது காரில் கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் உட்பட சிலர் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்தனர். கைதான சவுக்கு சங்கருக்கு மதுரை போதைப் பொருள் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் ஏற்கனவே ஜாமின் அனுமதித்தது. அந்நீதிமன்றத்தில் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்த நீதிபதி செங்கமல செல்வன் விசாரணையை டிச.20க்குஒத்திவைத்தார்.நீதிமன்ற உத்தரவுப்படி,சென்னைதேனாம்பேட்டை போலீசார் தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து, சவுக்கு சங்கரை கைது செய்தனர். தேனி மாவட்ட போலீசாரிடம் அவர் ஒப்படைக்கப்படுவார் என, சென்னை போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ