உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சென்னை ரவுடி மதுரையில் சுற்றிவளைப்பு

சென்னை ரவுடி மதுரையில் சுற்றிவளைப்பு

மதுரை:சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் கனகராஜ், 40. இவர் பிரபல ரவுடி பினுவின் கூட்டாளி; 2018 பிப்ரவரியில், சென்னையில் பினுவின் பிறந்த நாளை அவரது கூட்டாளிகள், 75 பேர் சேர்ந்து கொண்டாடிய போது போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது, கனகராஜ் உட்பட மூவர் தப்பினர். தேடுதல் வேட்டைக்குபின் கைது செய்யப்பட்டனர்.கனகராஜ் மீது பூந்தமல்லி, குன்றத்துார், வடபழனி போலீஸ் ஸ்டேஷன்களில் கொலை, வழிப்பறி, அடிதடி வழக்குகள் உள்ளன. பினு மீது போலீஸ் நடவடிக்கைகள் தீவிரமானதை தொடர்ந்து கூட்டாளிகள் பலர் பதுங்கினர். இந்நிலையில், ஜாமினில் வந்து, மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த கனகராஜை, நேற்று சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதையறிந்த அவரது மனைவி மேகலா வீடியோ ஒன்றை வெளியிட்டார்.அதில், 'என் கணவர் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக எந்த பிரச்னையிலும் ஈடுபடாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இரு குழந்தைகளுடன் நான் வாழ்கிறேன். பழைய பிரச்னையை காரணமாக வைத்து அவரை கைது செய்துள்ளனர். என்கவுன்டர் செய்யப் போவதாகவும் மிரட்டி இருக்கின்றனர். அவர் இல்லை என்றால், நாங்களும் இருக்க மாட்டோம்' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ