உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோழிக்கழிவுகளைக் கொட்டும் இடமான ரோடு

கோழிக்கழிவுகளைக் கொட்டும் இடமான ரோடு

ஒத்தக்கடை: மதுரை பாண்டி கோயில் முதல் ஒத்தக்கடை வரையிலான ரோடு பகுதியில் தொடர்ந்து கோழிக் கழிவுகளைக் கொட்டி வருகின்றனர். மதுரையில் இருந்து சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் இந்த ரோட்டின் இருபுறமும் கொட்டப்படும் குப்பையால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. கருப்பாயூரணி ராஜ்மோகன்: கொட்டப்படும் குப்பையால் சுகாதாரமற்ற சூழலில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் ஊராட்சி பகுதிகளில் கொட்டப்பட்ட கழிவுகளை நான்கு வழிச்சாலையில் கொட்ட ஆரம்பித்துள்ளனர். இதனால் தெரு நாய்கள் தொல்லையும் துர்நாற்றமும் வீசுகிறது. தொற்று நோய் பரவும் முன் மாநகராட்சி, ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !