உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் இன்று மாலை முதல்வர் ரோடு ஷோ: ஒவ்வொரு பகுதியாக செல்லும் போது போக்குவரத்து மாற்றம்

மதுரையில் இன்று மாலை முதல்வர் ரோடு ஷோ: ஒவ்வொரு பகுதியாக செல்லும் போது போக்குவரத்து மாற்றம்

மதுரை: மதுரையில் இன்று (மே 31) மாலை முதல்வர் ஸ்டாலின் 'ரோடு ஷோ' நிகழ்ச்சியை முன்னிட்டு அவர் ஒவ்வொரு பகுதியாக செல்லும் போது செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள்.பெருங்குடி சந்திப்பிலிருந்து 'ரோடு ஷோ' நடக்கும் அவனியாபுரம், மருதுபாண்டியர் சிலை, பெரியார் சிலை, வில்லாபுரம் ஆர்ச் வரையுள்ள ரோடு, ஜெயவிலாஸ் சந்திப்பு முதல் சோலையழகுபுரம், ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு, ஜீவாநகர் சந்திப்பு, சந்தரர்ராஜபுரம் மார்க்கெட், டி.வி.எஸ்., நகர் மேம்பாலம், மாடக்குளம் சந்திப்பு, ஜி.ஆர்.டி., ஓட்டல் ரோடு, பழங்காநத்தம், ரவுண்டானா, பைபாஸ் ரோடு, காளவாசல் சந்திப்பு, குரு தியேட்டர் சந்திப்பு வரையுள்ள திண்டுக்கல் ரோடு, அகர்வால் கண் மருத்துவமனை சந்திப்பு வரையுள்ள ரோடு, ஏ.ஏ.ரோடு, அரசரடி சிக்னல் சந்திப்பு வரையுள்ள ரோடு, புதுஜெயில் ரோடு, முன்னாள் மேயர் முத்து சிலை வரை இன்று காலை 6:00 மணி முதல் 'ரோடு ஷோ' முடியும் வரை எந்த ஒரு வாகனமும் நிறுத்த அனுமதி இல்லை.பெருங்குடி சந்திப்பிலிருந்து அவனியாபுரம், வில்லாபுரம் வழியாக வாகனங்கள் நகருக்குள் செல்வதற்கு அனுமதி இல்லை. நகரிலிருந்து வில்லாபுரம், பெருங்குடி வழியாக விமான நிலையம் செல்லும் வாகனங்கள் தெற்குவாசல், சிந்தாமணி ரோடு, ரிங் ரோடு மண்டேலா நகர் வழியாக செல்ல வேண்டும்.மண்டேலா நகர் சந்திப்பிலிருந்து பெருங்குடி, அவனியாபுரம், வில்லாபுரம் வழியாக நகருக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் அருப்புக்கோட்டை ரிங் ரோடு, விரகனுார் ரவுண்டானா, வைகை தென்கரை ரோடு வழியாக செல்ல வேண்டும்.மண்டேலா நகர் சந்திப்பில் இருந்து பெருங்குடி, அவனியாபுரம் வழியாக திருப்பரங்குன்றம் செல்லக்கூடிய வாகனங்கள் அருப்புக்கோட்டை ரிங் ரோடு, செம்பூரணி ரோடு வழியாக அவனியாபுரம் பஸ் ஸ்டாண்ட் சென்று திருப்பரங்குன்றம் ரோடு வழியாக செல்ல வேண்டும்

பழங்காநத்தம் ரவுண்டானா முதல் காளவாசல் சந்திப்பு வரை

கப்பலுார் ரிங் ரோட்டிலிருந்து திருநகர், திருப்பரங்குன்றம் வழியாக செல்லக்கூடிய கனரக சரக்கு வாகனங்களுக்கு இன்று மதியம் 1:00 மணி முதல் முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. இவ்வாகனங்கள் கூத்தியார் குண்டு பாலம் வழியாக நாகமலை புதுக்கோட்டை ரிங் ரோடு, சமயநல்லுார் ரிங் ரோடு வழியாக பாத்திமா கல்லுாரி ரவுண்டானா, ஆனையூர் வழியாக செல்ல வேண்டும்.சமயநல்லுார் ரிங் ரோட்டிலிருந்து பாத்திமா கல்லுாரி, குரு தியேட்டர் சந்திப்பு, காளவாசல் சந்திப்பு வழியாக பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் சாலை செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் -துவரிமான் ரிங் ரோடு, - நாகமலை புதுக்கோட்டை ரிங் ரோடு வழியாக கப்பலுார் பாலம் செல்ல வேண்டும்.திருப்பரங்குன்றத்திலிருந்து பழங்காந்தம் வழியாக பெரியார் பஸ் ஸ்டாண்ட், காளவாசல் சந்திப்பு செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் திருப்பரங்குன்றம் -அவனியாபுரம் ரோடு வழியாக அவனியாபுரம் சென்று நகருக்குள் செல்ல வேண்டும்.காளவாசல் சந்திப்பிலிருந்து பழங்காநத்தம் ரவுண்டானா வழியாக திருப்பரங்குன்றம் செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் கென்னட் ரோடு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி பெரியார் பஸ் ஸ்டாண்ட் திருப்பரங்குன்றம் ரோடு வழியாக செல்ல வேண்டும்.

குரு தியேட்டர் சந்திப்பிலிருந்து புதுஜெயில் ரோடு வரை

சமயநல்லுார் ரிங் ரோட்டிலிருந்து பாத்திமா கல்லுாரி, குரு தியேட்டர் சந்திப்பு வழியாக ஆரப்பாளையம் செல்லக்கூடிய பஸ்கள், இலகு ரக வாகனங்கள் அனைத்தும் பாத்திமா கல்லுாரி சந்திப்பு, தத்தனேரி மெயின் ரோடு, அருள்தாஸ்புரம் பாலம் சந்திப்பு. அம்மா பாலம் வழியாக ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும்.ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து குரு தியேட்டர் சந்திப்பு வழியாக வெளியூர் செல்லக்கூடிய பஸ்கள், வாகனங்கள் அனைத்தும் அகர்வால் கண் மருத்துவமனை சந்திப்பின் வலது புறம் திரும்பி, தெற்கு வைகை தென்கரை ரோடு, குரு தியேட்டர் சந்தப்பிற்கு முந்திய 'யூ டர்ன்' வழியாக வலது புறம் திரும்பி காமராஜர் பாலம் சென்று கல்லுாரி சந்திப்பு, திண்டுக்கல் ரோடு, சோதனைச்சாவடி வழியாக அனைத்து ஊர்களுக்கும் செல்ல வேண்டும்.உசிலம்பட்டி, தேனி, கம்பம், குமுளி ஆகிய ஊர்களிலிருந்து காளவாசல் சந்திப்பு வழியாக ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் நோக்கி வரும் அனைத்து பஸ்களும் நாகமலை புதுக்கோட்டை ரிங் ரோடு, துவரிமான் சந்திப்பு, சமயநல்லுார் ரிங் ரோடு சந்திப்பு வழியாக திண்டுக்கல் ரோடு, பரவை சோதனைச்சாவடி, பாத்திமா கல்லுாரி ரவுண்டானா, தத்தனேரி மெயின் ரோடு, அருள்தாஸ்புரம் அம்மா பாலம் வழியாக ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும்.காளவாசல் சந்திப்பிலிருந்து புதுஜெயில் ரோடு வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் அரசரடி சந்திப்பு, டி.பி. ரோடு நகரின் எந்த பகுதிகளுக்கும் செல்லலாம். கட்டபொம்மன் சிலை சந்திப்பு வழியாக நகரின் எந்த பகுதிக்கும் செல்லலாம்.

முன்னாள் மேயர் முத்து சிலை திறப்புக்கு பின் சர்க்கியூட் ஹவுஸிற்கு முதல்வர் செல்லும் வரை

அரசரடி சந்திப்பிலிருந்து புதுஜெயில் ரோடு வழியாக சிம்மக்கல் வழியாக கோரிப்பாளையம் பகுதிக்கு நோக்கி செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் டி.பி. ரோடு வழியாக பெரியார் பஸ் ஸ்டாண்ட், தெற்குமாரட் வீதி, கீழவாசல் சந்திப்பு, -காமராஜர் ரோடு வழியாக செல்ல வேண்டும். பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து சிம்மக்கல், யானைக்கல், புதுப்பாலம் வழியாக மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் தெற்குமாரட் வீதி சந்திப்பு, மகால் ரோடு, கீழவாசல் சந்திப்பு, காமராஜர் ரோடு வழியாக செல்ல வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

vijay
மே 31, 2025 09:50

பிரதமர் செயயறத பார்த்து முதல்வரும் செய்யறாரு. இதுவும் காப்பியா? ஒரிஜினல் எங்கேயும் இல்லையா அய்யா?


Devanand Louis
மே 31, 2025 09:43

மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சியின் கர்பகனா பகுதியிலிருந்து ஏற்பட்டுள்ள ஒரு முக்கிய சுற்றுச்சூழல் மற்றும் பொதுநல குறையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இணைதெரியதொரு நடவடிக்கையாக, நகராட்சி அதிகாரிகள் அல்லது அவர்கள் ஒப்பந்ததாரர்கள், ராயலசீமா பட்டியில் உள்ள ரயில்வே ப்ளாக் உற்பத்தி ஆலைக்குச் சொந்தமான கட்டுமான கழிவுகளை நகரின் முக்கிய சாலைகளில் பரப்பி வருகின்றனர். இந்த கழிவுகள் முறையாக சீரமைக்கப்படாமல் அல்லது சாலைக்கான தரநிலைகளுக்கு ஏற்ப தயார் செய்யப்படாமல் இருப்பதால், வாகனங்கள் செல்வதன் மூலம் மிகவும் அதிக அளவில் தூசி மாசு ஏற்படுகிறது. முக்கிய கவலைகள்: • உடல்நல பாதிப்பு: தூசியின் காரணமாக மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுகாதார சிக்கல்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோருக்கு ஏற்படுகின்றன. • வியாபார மீதான தாக்கம்: சாலையோர வியாபாரிகள் மற்றும் கடைகளில் வாடிக்கையாளர்கள் குறைந்து வருகிறார்கள், பொருட்களில் தூசி அடித்துவிடுகிறது. • சுற்றுச்சூழல் பாதிப்பு: நீண்ட காலமாக தூசி மாசு நிலவுவதால் மண் மற்றும் காற்று தரம் பாதிக்கப்படும். • பொது அறிவிப்பின்றி நடவடிக்கை: இப்பகுதியில் மக்கள் அறிவிப்பு இன்றி மற்றும் எந்தவொரு ஆலோசனையும் இல்லாமல் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நடைமுறை, நகராட்சி மேலாண்மையில் தவறான முன்மாதிரி anti-pattern ஆகும். இது பாதுகாப்பான, சுறுசுறுப்பான மற்றும் பொதுமக்கள் நலனுக்கு அமைவான திட்டமிடல் நடைமுறைக்கு எதிரானது. எங்களது கோரிக்கைகள்: 1. சாலைகளில் கையாளப்படுகிற கட்டுமான கழிவுகளின் உரிய பரிசோதனை மற்றும் உடனடி நிறுத்தம். 2. தூசி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், போதிய நீர் தெளிப்பு அல்லது மற்ற முறைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். 3. பயன்படுத்தப்படும் பொருட்களின் மூலம் மற்றும் தகுதியை உறுதி செய்யும் சோதனை. 4. சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார கண்காணிப்பு முறைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும். 5. மேற்கொள்ளப்பட உள்ள திருத்த நடவடிக்கைகள் மற்றும் காலக்கெடு தெளிவாக அறிவிக்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கையை உங்கள் அலுவலகம் உரிய முக்கியத்துவத்துடன் எடுத்துக்கொண்டு, பொது நலனுக்காக விரைந்து நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை