மதுரை: மதுரையில் பல்வேறு பள்ளிகளில் குழந்தைகள் தினவிழாவை மாணவர்கள், ஆசிரியர்கள் உற்சாகமாக கொண்டாடினர். மாநகராட்சி மறைமலைஅடிகளார் உயர்நிலை பள்ளி, சிறப்பு குழந்தைகளுக்கான கற்றல் மையத்தில் கமிஷனர் சித்ரா முன்னிலையில் கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி கமிஷனர் உரையாடினார். மாநகராட்சி கல்வி அலுவலர் மோகன், தலைமையாசிரியர் சாந்தி ஆசிரியர்கள் பங்கேற்றனர். பெருங்குடி அமுதம் மெட்ரிக் பள்ளியில் தாளாளர் ஜெயவீரபாண்டியன் தலைமை வகித்தார். முதல்வர் ஜெயஷீலா முன்னிலை வகித்தார். துணைமுதல்வர் ஸ்டெல்லா ஜெயமணி வரவேற்றார். கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது. மதுரை திருஞானம் துவக்கப் பள்ளியில் மாணவர் மன்றத் தலைவர் பூஜா தலைமை வகித்தார். செயலாளர் முகமது உமர் வரவேற்றார். இணைச் செயலாளர் ஹர்சித் ராஜ் தொகுத்து வழங்கினார். தலைமையாசிரியர் சரவணன் பேசினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியைகள் பாக்கியலட்சுமி, கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மன்ற துணைத் தலைவர் தமினா நன்றி கூறினார். ஒத்தக்கடை தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். ஆசிரியைகள் மாலா, மெர்சி, ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மோசஸ் வரவேற்றார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பெற்றோர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவி நவரத்தின நாச்சியார் நன்றி கூறினார். மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் போலீசார் சார்பில் திலகர்திடல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தங்கமணி முன்னிலையில் நடந்தது. மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம், பேனா உள்ளிட்டவை வழங்கி ஒழுக்க நெறிகளையும், சாலை விதிகளை கடைபிடிக்கவும் வலியுறுத்தப்பட்டது. மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். தலைமையாசிரியர் நாராயணன், எஸ்.ஐ.,க்கள் லிங்ஸ்டன், பாண்டியராஜன், போலீசார் பங்கேற்றனர். இப்பள்ளி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஆறாம் வகுப்பு மாணவர்கள், தலைமை ஆசிரியர், உதவியாசிரியர்களாக செயல்பட்டு தேசிய கொடியேற்றினர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் நாராயணன், உதவித் தலைமை ஆசிரியர்கள் ஆதிஞானகுமரன், திருவேங்கடத்தான், அகிலாண்டேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர். மதுரைக் கல்லுாரி மேல்நிலைப் பள்ளியில் இவ்விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. திருவாதவூர் ஏஞ்சல் தேவகி முதியோர் இல்லத்தில், படிக்கட்டுகள் அமைப்பு சார்பில் தலைவர் மலைச்சாமி தலைமையில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.முதிய வயது குழந்தைகளுக்கு பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. குளிர்காலத்தை முன்னிட்டு போர்வை உள்ளிட்ட தேவையான உதவிகள் வழங்கப்பட்டன.ஒருங்கிணைப்பாளர்கள் முகம்மது ஆஷிக் , முகம்மது காமில் ஏற்பா டுகளை செய்தனர். மதுரை காந்தி மியூசியத்தில் ஓரிகாமி காகித கலை மூலம் அமைதி புறா தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. செயலாளர் நந்தாராவ் தொடக்கி வைத்தார். இயற்கை வாழ்வியல் நிபுணர் தேவதாஸ் காந்தி பயிற்சி அளித்தார். கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் ஆர்.தேவதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். மதுரை விசாகன் பள்ளியில் முதல்வர் மஞ்சுளா வரவேற்றார். தாளாளர் பாகீரதி தலைமை வகித்தார். தேசிய ஸ்கேட்டிங் சாம்பியன் போட்டியில் பங்கேற்ற 2ம் வகுப்பு மாணவி யாழ்மித்ரா சிறப்பு விருந்தினராக கவுரவிக்கப்பட்டார். ஆசிரியை ஜெயந்தி உட்பட பலர் பங்கேற்றனர். நிர்வாக அதிகாரி மலர்விழி நன்றி கூறினார். வாடிப்பட்டி: பொட்டுலுப்பட்டி காந்திஜி அரசு உதவி பெறும் துவக்க பள்ளியில் பள்ளி செயலாளர் நாகேஸ்வரன் தலைமையில் நடந்தது. பள்ளி குழுத் தலைவர் தனபாலன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் வெங்கடலட்சுமி வரவேற்றார். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கலை, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர் ஆசீர்வாதம் பீட்டர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். ஆசிரியர்கள் எஸ்தர்டார்த்தி, ராஜா செல்வம் நன்றி கூறினர். திருப்பரங்குன்றம்: சந்திராபாளையம் ஜோதி நடுநிலை பள்ளியில் ஓய்வு டி.எஸ்.பி. மரகதசுந்தரம் தலைமை வகித்தார். ஜெயின்ட்ஸ் பெடரேஷன் தலைவர் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் நாகராஜன், ராஜேந்திரன், சமூக ஆர்வலர் பொன் மனோகரன் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர் லெனின் சுப்பையா சார்பில் பள்ளிக்கு 'டிவி' வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் சித்ரா நன்றி கூறினார். உசிலம்பட்டி: கருமாத்துார் புனித கிளாரட் பள்ளியில் அருண்குமார் தலைமை வகித்தார். ஆசிரியர் ஜெயபிரபு வரவேற்றார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் சூசைமாணிக்கம் பரிசு வழங்கினார். ஆசிரியர்கள் கதிர்வேல், சீதாலட்சுமி, ஆனந்த் ஏற்பாடு செய்திருந்தனர். எழுமலை: எழுமலை விஸ்வ வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் பாண்டியன் தலைமை வகித்தார். முதல்வர் யுவராஜ் வரவேற்றார். கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். மாணவி லயா நன்றி கூறினார்.